தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மெட்ரோ திட்டத்திற்கான அனுமதி வழங்காத பிரதமரை கண்டித்து ஆவேசம்

19 Nov 2025, 3:33 pm
மெட்ரோ திட்டத்திற்கான அனுமதி வழங்காத பிரதமரை கண்டித்து ஆவேசம்
<p><strong>மெட்ரோ திட்டத்திற்கான அனுமதி வழங்காத பிரதமரை கண்டித்து ஆவேசம்</strong></p> <p>கோவை, நவ.19- கோவை, மதுரை மாவட்டங்களுக் கான மெட்ரோ திட்டத்திற்கான உரிய அனுமதி வழங்காத பிரதமர் மோடி கோவை வருகையை கண்டித்து வாலி பர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மற்றும் மதுரை மாவட்டங் களுக்கு மெட்ரோ திட்டம் அறிவிக் கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் அவை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 20 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ளதால் அந்த அறிக்கையை ஒன் றிய அரசு மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசி யல் இயக்கங்கள் அமைப்புகள் கடும் &nbsp;கண்டனத்தை தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில், உடனடியாக கோவை மற்றும் மதுரை மாவட்டங்க ளுக்கான மெட்ரோ திட்டத்திற்குரிய அனுமதி வழங்கக் கோரி புதனன்று இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் &nbsp;அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் ராஜா தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் தினேஷ் ராஜா, துணைச் செயலா ளர் விக்னேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ &nbsp;திட்டத்தை கொண்டு வராத ஒன்றிய பாஜக அரசு, பாஜக ஆளும் மாநிலங்க ளான ஆக்ரா, நாக்பூர், பூனே, இந்தூர், &nbsp;சூரத் ஆகிய நகரங்களில் குறைவான &nbsp;மக்கள் தொகை இருந்தாலும் மெட்ரோ &nbsp;ரயில் திட்டத்தை செயல்படுத்தியுள் ளது. வேண்டுமென்றே தமிழகத்தை ஒன் றிய பாஜக அரசு வஞ்சித்து, புதனன்று கோவை வந்த பிரதமர் மோடியை கண் டித்து &ldquo;கோபேக்மோடி&rdquo; என முழக்கங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கருப்பு கொடி போராட்டம் &nbsp;கோவை கொடிசியா மைதானத் தில் நடைபெறும் இயற்கை விவசாயி கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந் திர மோதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித் தும், &ldquo;மரபணு மாற்றப்பட்ட விதைகளை &nbsp;உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கிய பிரத மர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் &nbsp;மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதை களை அனுமதிக்க கூடாது. நதி நீர் &nbsp;இணைப்பில் ஒன்றிய அரசு பாராபட்ச மாக நடந்து கொண்டிருக்கிறது என &nbsp;குற்றம்சாட்டி கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி &nbsp;போராட்டம் நடைபெற்றது. அவர்களை &nbsp;காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோன்று மசக்காளிபாளை யம் பகுதியில் முற்போக்கு அமைப்பு கள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் &nbsp;நடைபெற்றது. தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திக, விசிக, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, திராவிட இயக் கத் தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, &nbsp;மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு &nbsp;அமைப்பினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது &ldquo;மோடியே திரும்பி போ&rdquo; என பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப் பினர். திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, &nbsp;சிலர் சாலையில் அமர்ந்து சாலை மறிய லில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவிநாசி இதேபோன்று, பீகார் மாநில தேர்தல் &nbsp;பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந் திர மோடி தமிழக மக்களை அவமதிக் கும் விதமாக பேசியதை கண்டித்து, மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்க ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் விடு தலைச் செல்வந்தன் தலைமையில் கோவை செல்வதற்காக தயார் நிலை யில் இருந்த போது, அவர்களை அவி நாசி காவல்துறையினர் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.