200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு: முதல்வர் பேச்சு!
7 Feb 2026, 2:02 pm
<p><strong>200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு: முதல்வர் பேச்சு!</strong></p>
<p>விருதுநகர்: “200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு!” என்று முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், விருது நகர் மாவட்டம் கல்குறிச்சியில் சனிக்கிழமையன்று பிரம்மாண்டமாக நடை பெற்றது. இதில், பேசுகையிலேயே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். “மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீட்டை கொண்டுவந்து நம்மை படிக்க விடாமல் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பாஜக திட்டமிடுகிறது. இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. மாநிலங்களை நகராட்சிகளாக மாற்ற பார்க்கிறது பாஜக அரசு. ஆனால், தமிழ்நாட்டில் 7-ஆவது முறையாகவும் திமுகதான் ஆட்சி அமைக்கும். இதில், நமது எதிரிகள் உள்பட யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்” என்றும் இளைஞர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.</p>
