தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நமது தோழமை தான் பாசிசத்தை வீழ்த்தும்!’

2 Feb 2026, 3:32 pm
‘நமது தோழமை தான் பாசிசத்தை வீழ்த்தும்!’
<p><strong>&lsquo;நமது தோழமை தான் பாசிசத்தை வீழ்த்தும்!&rsquo;</strong></p> <p>சென்னை, பிப். 2 - கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த உங்களில் ஒருவனாக நானும், என்னில் பாதியாக நீங்களும் என &nbsp;இருக்கிறோம்; நமது இந்த தோழமை தான் மதவாதத்தை, பாசிசத்தை, எதேச்சதிகாரத்தை வீழ்த்தும்! என்று முதலமைச்சர் கூறினார். சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, எல்லாருக்கும் எல்லாம் எனும் சமத்துவச் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டு வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுவதாக முதலமைச்சர் தெரி வித்தார். கம்யூனிசம் என்பது மனிதர்கள் அனைவருக்குள்ளும் உருவாக வேண்டிய உணர்வு என்றும், செங்கொடியை ஏந்தி உழைக்கும் கட்சித் தோழர்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை என்று பாராட்டினார். இரு இயக்கங்களுக்கும் இலக்கு பொதுவானது! திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடைமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே இரு இயக்கங்களின் ஒற்றை இலக்கு என்றார். திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள நட்பு நூறாண்டு காலமாக தொடர்ந்து வருவது என்றும், தலைவர் கலைஞர் தனக்கு ஸ்டாலின் என்று பெயரும் வைத்ததும் அதனால் தான் என்றும் நினைவுபடுத்தினார். தேர்தல் அரசியலுக்கும் அப்பாற்பட்ட தோழமை இரு இயக்கங்களுக்கும் இடையி லான நட்பு தேர்தல் அரசியலை கடந்த நட்பு என்று கூறிய முதலமைச்சர், சாதிய வாதம், வகுப்புவாதம், எதேச்சதிகார வாதம் என்று மக்களை ஒடுக்கும் அத்தனைக்கும் எதிராக ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமை இது என்றார். இந்த தோழமைதான் பாசிசத்தை ஒழிக்கும், எதேச்சதிகாரத்தை வீழ்த்தும், மதவாதத்தை வீழ்த்தும் என்று உறுதியாக கூறினார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெறப்போகும் வெற்றி பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.