ஓ.எஸ். மணியனிடம் ஒரு ‘பழைய பாக்கி’!
2 Apr 2026, 5:30 am

ஓ.எஸ். மணியனிடம் ஒரு ‘பழைய பாக்கி’!

சினிமாவில் ‘பாக்கி வைக்காமல்’ சிபாரிசு செய்வார் ‘வசூல் ராஜா’ கமல். ஆனால் மயிலாடுதுறை அதிமுகவிலோ “பாக்கியைக் கேட்டாலே பதவி காலி” என்ற புதிய அரசியல் திரில்லர் ஓடிக்கொண்டிருக்கிறது.

வட்டியும் முதலும் வசூல் ஆகுமா? அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் கிளப்பியுள்ள ‘ரூ. 25 லட்சம்’ விவகாரம், மயிலாடுதுறை அதிமுகவை கதிகலங்க வைத்துள்ளது. 2016 தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு ஜனார்த்தனன் கடன் கொடுத்தாராம்.

இப்போது வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை ரூ. 1.20 கோடியாக எகிறி நிற்கிறது. “காசைக் கொடு என்று கேட்டால், ‘கட்சியில் உனக்கு இடமில்லை’ என்று முன்னாள் அமைச்சர் கையை விரித்ததாக ஜனார்த்தனன் புலம்புகிறார்.