`ஆர்.வி.எஸ்’ வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி
22 Feb 2026, 3:26 pm
<p><strong>`ஆர்.வி.எஸ்’ வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி</strong></p>
<p>திருவாரூர், பிப்.22- ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், புல்லவராயன் குடிகாடு இயற்கை விவசாயி அருள் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில், விவசாயிகளுடன் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியில், இயற்கை முறை விவசாயிகளுடன், ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். நிகழ்வில், இயற்கை வேளாண்மை முறையில் களைச் செடி மற்றும் களைத் தாவரங்களை அகற்றுதல், கண்டறிதல், இயற்கை முறையில் நோய் மற்றும் பூச்சி தாக்கம், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மையின் இடர்பாடுகள் குறித்தும் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தப் பயிற்சி, தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுடன், இயற்கை விவசாயம் குறித்த விரிவான அறிவைப் பெற உதவியதாக மாணவர்கள் தெரிவித்தனர். பயிற்சி மாணவர்கள் அனைவருக்கும், இயற்கை விவசாயி அருள் நடத்தும் வளம் இயற்கை அங்காடி நிறுவனத்திலிருந்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p>
