மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின் உடலுறுப்புகள் தானம்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின் உடலுறுப்புகள் தானம்</strong></p>
<p>கோவை, மார்ச் 8- திருப்பூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட வாலிப ரின் உடலுறுப்பு கள் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அதன்மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறவுள்ளனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் பாஸ்கரன் (29). இவர் காகித ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந் தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரனின் தாயார் விசாலாட்சி கால மானார். 16 ஆம் நாள் காரியத்திற்காக பொருட்கள் வாங்குவதற்காக பாஸ்க ரன் தனது மனைவி, குழந்தை மற்றும் சகோதரியுடன் காரில் உடுமலை பேட்டைக்கு சென்றார். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பியபோது, கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயங்களுடன் வீடு திரும்பிய நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாஸ்கரன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இந்த துயரமான சூழலிலும், பாஸ்க ரனின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முன்வந்த னர். இதைத்தொடர்ந்து, ஞாயிறன்று மருத்துவக்குழுவினர் பாஸ்கரனின் கண், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள் ளிட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றனர். தானமாக பெறப்பட்ட இந்த உறுப்புகள் மூலம் மூன்று பேர் மறு வாழ்வு பெறவுள்ளனர். தாயாரின் இறுதிச் சடங்கு காரியத்திற்காக சென்ற மகன், விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலை யிலும், உடலுறுப்பு தானம் மூலம் மற்ற வர்களுக்கு வாழ்வளித்த சம்பவம் அப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.</p>
