மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்
18 Jan 2026, 4:50 pm
<p><strong>மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்</strong></p>
<p>கோவை, ஜன.18- சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின், உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், வடபருத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் நாட்டுதுரை (34). இவர் கடந்த ஜன.15 ஆம் தேதியன்று மாலை இரு சக்கர வாகன விபத்து ஏற் பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக் கல் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில், ஜன.16 ஆம் தேதியன்று நாட்டுதுரைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனை மருத்து வர்கள் உடலுறுப்பு தானம் பற்றி அவரது உற வினர்களிடம் எடுத்துக் கூறியதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனையின் படி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி, உடலுறுப்பு தானம் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி அவரது கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை கோவை அரசு மருத்துவக்கல்லூரி உட்பட தனியார் மருத்துவமனைக்கு,ம் சேலத்தி லுள்ள தனியார் மருத்துவமனைக்கும் தான மாக அளிக்கப்பட்டன. இதன்பின் நாட்டு துரையின் உடலுக்கு கோவை அரசு மருத்துவ மனை முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப் படைத்தனர்.</p>
