கொடுங்கையூர் குப்பை எரி உலையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவு
24 Feb 2026, 3:55 pm
<p><strong>கொடுங்கையூர் குப்பை எரி உலையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவு</strong></p>
<p>சென்னை, பிப். 24: பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகக் கொடு ங்கையூர் குப்பை எரிவுலையின் செயல்பாடு களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் துறையின் மேற்பார்வை பொறியாளர் வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “இந்த கடிதம் கிடைத்த உடனேயே கொடுங்கை யூர் குப்பை எரிவுலையின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தி, தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள 48 சுற்றுச்சூழல் அளவுகோல்கள் தொடர்பான முழுமையான ஒழுங்குமுறை பின்பற்றுதல் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அந்நிறுவனத் திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடுங்கை யூர் குப்பை எரிவுலையில் கடந்த பிப்ரவரி 18 அன்று சென்னை மாநகராட்சி, மாசு கட்டு ப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது உமிழ்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீர் ஸ்க்ரப்பர் அமைப்பு போதுமானதாக இல்லை, வளாகத்தில் சுத்தம் மற்றும் பரா மரிப்பு குறைபாடுகள் காணப்பட்டன, சுத்தி கரிக்கப்படாத கழிவுகள் பெருமளவில் குவிந்திருந்தன, 100 டன்னிற்கும் அதிகமான அடி சாம்பல் எரிவுலையின் வளாகத்திலேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது, போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த குறைபாடுகள், செயல்பாட்டுத் தவறுகள் மற்றும் சட்டபூர்வ சுற்றுச்சூழல் விதிமுறை களையும் ஒப்பந்த நிபந்தனைகளையும் பின்பற்றாத நிலையை வெளிப்படுத்து கின்றன என்று மாநகராட்சி தெரிவித்துள் ளது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைக்கப்பட்ட தொடர் உமிழ்வு கண் காணிப்பு அமைப்பினை நிறுவிச் செயல் படுத்துவது கட்டாயம் என்பதையும் மாநக ராட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சண்முகம் கூறுகையில், “இந்த அறிவிப்பை கூட்டமைப்பு வரவேற்கிறது. அதே நேரம் அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது டன், மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய கேடு விளைவித்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுங்கையூரில் அறிவிக்கப்பட்டுள்ள 2,100 டன் குப்பை எரி உலை திட்டத்தை முற்றாகக் கைவிட வேண்டும்” எனத் தெரி வித்தார்.</p>
