‘வாய்மொழி இலக்கியம் அழுத்தமானது’
6 Dec 2025, 2:48 pm
<p><strong>‘வாய்மொழி இலக்கியம் அழுத்தமானது’</strong></p>
<p>தமுஎகச மாநாட்டில் 16ஆவது மாநில மாநாட்டில் மதுக்கூர் இராமலிங்கம் ஆற்றிய தலைமையுரையில், சிலர் வெண்மணியைப் பற்றிச்சொல்லும் போது அது அரை படி நெல்லுக்கான போராட்டம் என்று மட்டும் குறுக்கிச் சொல்வார்கள். உண்மையில் அன்றை க்கு இங்கிருந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும், கூலிக்கான போராட் டத்தையும் மிக நுட்பமாக இணைத்து, சாதியப் பிரச்சனையையும், வர்க்கப் பிரச்சனையையும் இணைத்து நடத்திய போராட்டம்தான் கிழக்கு தஞ்சை போராட்டம் என்பதாகும். இன்றைக்கும் தஞ்சை மாவட்ட நாடோடிப் பாடல்கள் என்று ஒரு நூல் இருக்கிறது. அதிலே ஒரு பாடல் என்ன வென்றால், இன்றைய இளைய தலை முறைக்கு அதெல்லாம் கூட புதிய செய்தியாக இருக்கும். காலுக்குக் கீழே முழங்கால்வரைதான் விவசாயத் தொழிலாளர் பெண்கள், பட்டியலினப் பெண்கள் சேலை கட்ட வேண்டும். பிறகு பி.சீனிவாசராவ் , மணலி கந்த சாமி போன்றவர்கள் நடத்திய போ ராட்டங்களின் விளைவாகத்தான் முழங்கால் வரை இருந்த சேலை கணுக் கால் வரைக்கும் வந்தது. இதை, நடவுப் பாடல்களிலே அந்தப் பெண்கள் பாடும்போது, என்ன பாடுகிறார்கள் என்றால், “முழங்கால் வரை இருந்த சேலையை கணுக்கால் வரை இறக்கி யது யாரு? பி.சீனிவாசராவ் என்றே கூறு!” என்று பாடுகிறார்கள் என்று சொன்னால், எழுதப்பட்ட இலக்கி யங்களைவிட மக்களினுடைய வாய் மொழி இலக்கியம் என்பது அழுத்தமா னது, ஆழமானது, பரிசுத்தமானதாகும். இப்போது இன்று இங்கே மேற்கு தஞ்சையில் நின்று பேசிக் கொண்டி ருக்கிறோம். இன்றைய வரைக்கும் தன் உடல்கூட கிடைக்காத ஒரு மகத் தான தியாகி உண்டென்றால் அது தியாகி என்.வெங்கடாசலம் அவர்கள் தான். அவர்கள் கூலிப் போராட்டத்தை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தையும், நடத்தினார்கள். அவருடைய ஊரான இராயமுண்டான் பட்டியிலே, ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர், செருப்பு அணிந்துகொண்டு சைக்கிளிலே சென்றதற்காக, அவரை இறக்கிவிட்டு அடித்து செருப்பையும், சைக்கிளையும் பறித்துக் கொண்டார் கள். அவர் நேராக தோழர் என்.வெங்கடா சலம் அவர்களிடம் சென்று முறை யிட்டார். தோழர் என்.வெங்கடாசலம் தன்னுடைய செருப்பையும், தன்னு டைய சைக்கிளையும் கொடுத்து அந்த தெரு வழியாக ‘இப்போது போ, எவன் உன்னை அடிக்கிறான்’ என்று பார்க்கி றேன் என்று சவால்விட்ட மண் இந்த மண். வெவ்வேறு பாதையல்ல... இன்றைக்கும் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கிற சமூகத்தில் அந்த இரண்டு போராட்டங்களையும் இணைத்து நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. “இரண்டு கால்களால் நடக்க வேண்டும். ஒன்று சமூக நீதியை நோக்கிய பாதை, இரண்டு பொருளா தார நீதியை நோக்கிய பாதை. இரண்டும் வெவ்வேறு பாதை அல்ல. சாதியாகவும், வர்க்கமாகவும் இணைந்து இருக்கிற ஒரு சமூகத்தில் அதற்கான போராட்டத்தையும் இணைந்து நடத்த வேண்டும்” என்று அன்பிற்கினிய தோழர் சீத்தாராம் யெச்சூரி சொல்வார். அதனைத்தான் நாம் நம் கொள்கை அறிக்கையிலே சொல்லி இருக்கிறோம். இன்றைக்கு சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக ஒரு கனத்த மவுனம் நிலவுகிற சூழலில் அன்றைக்கு ஒரு காதல் ஜோடி நெல்லையிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்திற்கு வந்து தஞ்சம் அடைந்த போது, அந்த அலுவலகம் தாக்கப் பட்டது. நமக்கு எதற்கு வம்பு என்று நாம் ஒதுங்கிப்போகவில்லை. அதே நெல்லை மண்ணிலே கவின் படுகொலையைத் தொடர்ந்து தோழர் பி.சண்முகம் அவர்கள் அங்கே உங்கள் சாதி மறுப்பு காதல் திருமணத்திற்கு இடையூறு வரு மேயானால் எங்கள் அலுவலகங்கள் உங்களுக்காக திறந்தே கிடக்கிறது, என்று சொன்ன அந்த தெம்பும் திராணியும் எங்களுக்கு உண்டு. வர்க்கப் போராட்டம் என்பது விடுதலைப் போராட்டக் காலத்தின் ஒரு பகுதியாக, மற்றவர்கள் விடுதலைப் போ ராட்டத்தை மட்டும் தனித்து நடத்திய போது விடுதலை என்பது பெண்ணுக் கான விடுதலையாகவும், மண்ணுக் கான விடுதலையாகவும் இணைத்து நடைபெற வேண்டும் என்பதனுடைய வெளிப்பாடுதான் தெலுங்கானா, ஓர்லி ஆதிவாசிப் போராட்டங்கள், கிழக்கு தஞ்சை போராட்டங்கள் என்பதையும் தோழர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.</p>
