தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்: பட்டா ரத்து விவகாரத்தில் ஓ.பி.எஸ். நேரில் ஆஜராக நோட்டீஸ்
30 Sept 2026, 9:21 pm

தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்: பட்டா ரத்து விவகாரத்தில் ஓ.பி.எஸ். நேரில் ஆஜராக நோட்டீஸ்

தேனி, செப்.30-மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையத்தின் உத்தரவுப்படி, முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து, பட்டியலின மக்களுக்கு மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடத்தப்பட்ட காத்திருப்புப் போராட்டத் தின் எதிரொலியாக, வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரியகுளம் சார் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தேனி அல்லிநகரம் ராஜாகளம் பகுதியில் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.மூக் கன், எம்.முத்துசாமி ஆகியோருக்கு 40 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலம் ஹரிசங்கர், சுப்புராஜ் ஆகியோர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் பெயருக்கு கிரயம் செய்யப்பட்டு, பட்டா மாற் றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மாநில பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பட்டாவை ரத்து செய்து, கடந்த 24.12.2024 அன்று மீண்டும் மூக் கன், முத்துசாமி பெயரில் பட்டா வழங்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத் தப்பட்டும் பட்டா மாற்றம் செய்யப்படாமல் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளையொட்டி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்துக்கு முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் இ.தர்மர், மாவட்டப் பொருளாளர் எஸ்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் ஆகியோர் தலைமைவகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எம்.பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பட்டாமாற்றம் செய்து தரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்து, மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து, சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அக்டோபர் 9-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆஜராகுமாறு நோட்

டீஸ் அனுப்பப்படும் என்றும், அன்றைய தினம் பட்டா மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

போராட்டத்தில் சங்க மாவட்டத் தலைவர்கள் டி.வெங்கடேசன், எம்.வி.முருகன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், சு.வெண்மணி, சி.முருகன், ஜி.சண்முகம், டி.நாகராஜ், ஏ.கே.சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.