தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

19 Jul 2026, 9:16 pm
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுதில்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்களன்று தொடங்குகிறது. இதை யொட்டி ஞாயிறன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மோடி அரசு கடைப்பிடித்த பாரபட்சமான அணுகு முறையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்தக் கூட்டத்தில் ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா (என்சிபிஐ)’ என்ற அமைப்புடன் இணைந்த திரிணாமுல் காங்கிரஸின் அதிருப்தி பிரிவினரை (20 எம்.பி.,க்கள்) மோடி அரசு அழைத்ததைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. நாடாளு மன்ற இணையதளத்தில் இன்னும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் களாகவே காட்டப்படும் அதிருப்தி எம்.பி.,க்கள் குழுவிற்கு வேறு கட்சியின் பெயரில் எப்படி அழைப்பு விடுக்கப் பட்டது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

மக்களவை சபாநாயகரிடம் திரி ணாமுல் காங்கிரஸின் அதிருப்தி பிரிவு தொடர்பான இறுதி முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் ஒரு கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து அரசு பாரபட்சமாகச் செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், திரிணா முல் எம்.பி சவுகதா ராய்,”அங்கீக ரிக்கப்படாத ஒரு கட்சிக்கு அழைப்பு விடுத்தது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல்” என்று கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலை வர் பிரமோத் திவாரி,”நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம். இந்த வெளி நடப்பு என்பது என்சிபிஐ-க்கு அழைப்பு விடுத்ததற்கு எதிரான அடையாளப் புறக்கணிப்பு” என்று கூறினார். இதனை யெடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.