முந்தய பக்கம்

சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு

23 Jan 2026, 5:49 pm
சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு
<p><strong>சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு</strong></p> <p>புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக வியாபாரிகள் சாலையோரம் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பத்திரிக்கை செய்தி அடிப்படையில் வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர், கடைகளை அப்புறப்படுத்த வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனையறிந்த சாலையோர விற்பனையாளர் மற்றும் சிறு கடை தொழிலாளர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் பி.சுந்தரம், நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் பி.கே.மூர்த்தி, டி.மாலதி ஆகியோர் வியாபாரிகளை சந்தித்து பேசினர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி &nbsp;உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram