கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
9 Feb 2026, 3:02 pm
<p><strong>கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு</strong></p>
<p>ஈரோடு, பிப்.9- எலத்தூர் பகுதியில் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலு வலத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், எலத்தூர் ஏரி பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எலத்தூர் பேரூராட்சியில் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட உள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நம்பி யூர் வட்டத்திற்குட்பட்ட அஞ்சானூர், ஆண்டிபாளையம், கூடக்கரை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 400 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு, கோவில்கள், விவ சாய நிலங்கள் மற்றும் ஆழ்குழாய் கிண றுகள் மாசு ஏற்படுவதற்கான வாய்ப் பாக அமையும். இதுகுறித்து அனைத் துத்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப் பப்பட்டுள்ளது. எனவே, இப்பணியை தொடங்காமல், வேறு இடத்திற்கு மாற் றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p>
