தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிதாக டாஸ்மார்க் கடை அமைக்க எதிர்ப்பு

15 Dec 2025, 2:48 pm
புதிதாக டாஸ்மார்க் கடை அமைக்க எதிர்ப்பு
<p><strong>புதிதாக டாஸ்மார்க் கடை அமைக்க எதிர்ப்பு</strong></p> <p>சேலம், டிச.15- சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பிரதான சாலையில் புதிதாக &nbsp;டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட &nbsp;ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி பொதுமக்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மூணாங்கரடு ஒன்பதாம் பாளையம் ராம சாமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று வந்தனர். அப்போது திடீ ரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்ற னர். பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்கள் அவர்களை &nbsp;தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து பேர் மட்டும் &nbsp;அதிகாரியை சந்திக்க அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர். &nbsp;இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், சேலம், சீல நாயக்கன்பட்டி ஆத்தூர் பிரதான சாலையில் சுமார் 600-க்கும் &nbsp;மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஏற்கனவே அப் பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த நிலையில் நெடுஞ் சாலையில் புதிதாக டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலை யில் விரைவில் டாஸ்மார்க் கடை திறக்க திறக்கப்பட உள் ளது. இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு இருப்பவர்களால் &nbsp;அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் செல்வதற்கு மிகவும் &nbsp;சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் மீண்டும் புதிதாக &nbsp;டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டால் யாரும் செல்ல &nbsp;முடியாத நிலை ஏற்படும். தற்போது அமைக்கப்படும் டாஸ் மார்க் கடை பள்ளி மற்றும் கோவில் அருகிலேயே திறக்க &nbsp;நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மக்களின் வாஸ் வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள &nbsp;டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் அந்த கடையை &nbsp;அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் நெடுஞ்சாலையில் &nbsp;அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக &nbsp;தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.