தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

5 Jan 2026, 6:21 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

சேலம், ஜன.5- வெள்ளாளப்பட்டி குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக்  கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆட்சியர்  அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்ப தற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர் இப்பகுதியில் டாஸ்மார்க் கடை அமைக்கப்பட்டால் பள்ளிக்கு  செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அதிக  அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டிடத்தில் அரு காமையில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினரும்  வசித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தும், தொடர்ந்து கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட  பெண்கள் புதியதாக குடியிருப்பு பகுதியில் அமைக்கும் டாஸ்மார்க் கடை திட்டத்தை கைவிட வலியுறுத்தி திங்களன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப் பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தி மனு வழங்க அனுமதித்த னர்.

பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி: மருத்துவமனையில் அனுமதி

கோவை, ஜன.5- ஓடக்கல்பாளையம் அரசுப் பள்ளியில்  மதிய உணவு உண்ட 15-க்கும் மேற்பட்ட  மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சுல் தான்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஓடக்கல் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் திங்க ளன்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம் போல மதிய உணவு வழங்கப்பட்டது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சில மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர் களை உடனடியாக அருகில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்க ளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இது குறித்து தகவலறிந்த சுல்தான் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO)  சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை  நடத்தினார். மதிய உணவில் ஏதேனும் குறை பாடுகள் இருந்ததா அல்லது வேறு ஏதேனும்  காரணமா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் குறித்து சுல் தான்பேட்டை போலீசாரும் வழக்குப் பதிவு  செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு உண்ட பின் உடல்நலக்குறைவு ஏற் பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.