தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு

30 Dec 2025, 4:07 pm
100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து  மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு
<p><strong>100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து &nbsp;மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு</strong></p> <p>தேனி, டிச.30- மத்திய அரசின் மகாத்மா &nbsp;காந்தி தேசிய ஊரக வேலை &nbsp;உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, நிதி பங்களிப்பை குறைத்து கிராமப்புற ஏழை, &nbsp;எளிய மக்களை வஞ்சிக்கும் &nbsp;ஒன்றிய அரசை கண்டித்து &nbsp;தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங் கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய &nbsp;ஊரக வேலை உறுதி திட்டத் &nbsp;தின் பெயரை &ldquo;விபிஜி ராம்ஜி&rdquo; என பெயர் மாற்றம் &nbsp;செய்து ஒன்றிய அரசு அண் &nbsp;மையில் திருத்தம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் உள்ள &nbsp;ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள் சங்கத்தினர் செவ் &nbsp;வாயன்று ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் த.சரவணன் வர வேற்று பேசினார். முன்னாள் &nbsp;மாவட்டத் தலைவர் கே. துரைராஜ் தொடங்கி வைத் &nbsp;தார். போராட்டத்தை ஆத ரித்து முன்னாள் மாவட்டச் செயலாளர் க.கனகராஜன், மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி ஓய்வூதியர் சங்க &nbsp;மாநில தலைவர் பா.ராம மூர்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் பேசினர். அரசு &nbsp;ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் க.முத்துக்குமார் நிறைவு செய்து பேசினார். மாவட்ட பொருளாளர் ச. முனிராஜ் நன்றி கூறினார். உண்ணாவிரதத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டி பட்டி, கடமலை - மயிலை, போடிநாயக்கனூர், சின்ன மனூர், உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய 8 ஊரா ட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அலுவலர்கள், அதி காரிகள் என சுமார் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.