மதுக்கடைக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு
19 Jan 2026, 2:23 pm
<p><strong>மதுக்கடைக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>ஈரோடு, ஜன.19- மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மதுபானக் கடை திறக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சமாதானம் செய்தனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங் கள் என்று ஆலோசனை கூறி சென்றனர். அதன்பேரில், கட்சி பாகுபாடின்றி பெரு மளவில் தன்னெழுச்சியாக திரண்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், திங்க ளன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப் பட்டது. இதில் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல் வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.</p>
