தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

50 ஆண்டு அனுபவ வீட்டை அகற்ற எதிர்ப்பு

23 Feb 2026, 5:35 pm
50 ஆண்டு அனுபவ வீட்டை அகற்ற எதிர்ப்பு
<p><strong>50 ஆண்டு அனுபவ வீட்டை அகற்ற எதிர்ப்பு</strong></p> <p>ஈரோடு, பிப்.23- 50 ஆண்டு அனுபவ உரிமை &nbsp;உள்ளவரின் வீட்டை அகற்றக்கூடாது &nbsp;என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு, வெண்டிபாளையம், பால தண்டாயுத வீதியை சேர்ந்த சு. வேலாயம்மாள் என்பவர், திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத் தில் மனு ஒன்றை அளித்தார். அதில், &nbsp;ஈரோடு &ldquo;இ&rdquo; கிராமம் புல எண் 1314-ல் &nbsp;ஈரோடு முத்தூர் சாலையில் கி.மீ.2/6 &nbsp;இடது புறத்தில் 196 சதுர அடி சிமெண்ட் அட்டை வீடு கட்டி, அனு மதியின்றி அரசு நிலத்தை அனுப வித்து வருவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வீடு கட்டி குடியி ருந்து வருகிறேன். குடும்ப அட்டை, &nbsp;ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு சான்றுகள் &nbsp;வழங்கப்பட்டுள்ளன. மாநகராட் சிக்கு வரியும் செலுத்தி வருகிறேன். மின் இணைப்பும் பெற்றுள்ளேன். மேலும், எனக்கு இந்த வீட்டைத் தவிர வேறு எந்த இடத்திலும் வீடோ, இடமோ இல்லை. நான் குடி யிருக்கும் இடமானது பொது போக்கு வரத்தான பேருந்து மற்றும் கனரக &nbsp;வாகனங்கள் செல்லாத சாலையா கும். ரயில் செல்லும் ரயில் பாதையு டன் (Dead end) இதில் சாலை நிறை வடைந்து விடுகிறது. தவிர தற் பொழுது மேம்பாலத் திட்டமாக இல்லாமல் கீழ்நிலைப்பாலமாகவே ரயில்வே துறை அமைப்பது என்ற &nbsp;அடிப்படையில் பணிகள் நடந்து வரு கின்றன. தேவையான அளவு பாலம் &nbsp;அமைக்கப்பட்டு கீழ்நிலைப்பாலப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. நான் தற்போது குடியிருக் கும் இடம் கூடுதலாக பாலம் கட்டும் பணிகளுக்கு தேவையில்லை. நீண்ட காலமாக நெடுஞ்சாலை துறை புறம்போக்கு நிலத்தில் குடி யிருந்து வாழும் எளிய மக்களை அப் புறப்படுத்தாமல் வீட்டு மனைப்பட்டா &nbsp;வழங்கலாம் என்று அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. தற்போது, பிரதான சாலை அமைக்கும் பணிக்கு தேவையான வீடுகள் அகற்றப்பட்டு விட்டது. ஆகவே, மேலும் கூடுதலான மக்கள் &nbsp;பாதிக்கும் வகையில் எனது வீட்டை (கூடுதலாக புதிய வீடுகளை) அகற்றுவதை நிறுத்தி வைத்திட வேண்டும். அல்லது எனக்கு மாற்று &nbsp;இடம் வழங்க வேண்டும் என அதில் &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ் வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு தாலுகா செயலாளர் என்.பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.