தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனிநபருக்குச் சொந்தமான இடத்தை பொதுவழியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

9 Feb 2026, 3:02 pm
தனிநபருக்குச் சொந்தமான இடத்தை பொதுவழியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு
<p><strong>தனிநபருக்குச் சொந்தமான இடத்தை பொதுவழியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு </strong></p> <p>கள்ளக்குறிச்சி, பிப்.9- &nbsp; உளுந்தூர்பேட்டை வட்டம் கூட்டடி கள்ளக்குறிச்சி கிராமத்தில் தனபால், சின்னத்தம்பி, ஆறுமுகம் ஆகியோர் தங்களது நிலத்திற்குச் செல்வதற்காக ஒரு பாதையை அமைத்துள்ளனர். இதை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். சில தனிநபரின் சுயநலத்திற்காக அந்தப் பாதையில் சிமெண்ட் சாலை போட உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி ஆகியோர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இடத்தை அளவை செய்வதற்கு வருவாய்த் துறையில் இருந்து நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் வந்திருந்தனர். இடம் அளவீடு செய்வதற்கு காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரிடம் நில உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு விசாரணையில் உள்ளது என்றும் கூறினர். இந்த நிலையில் வேண்டுமென்றே வருவாய்த் துறையினர் அளவீடு செய்வது தனி நபர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நில உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். சென்னை மற்றும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இதற்கான வழக்கை அவர்கள் தொடர்ந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.