தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசி சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற எதிர்ப்பு: அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

15 Dec 2025, 5:05 pm
அவிநாசி சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற எதிர்ப்பு: அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அவிநாசி சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற எதிர்ப்பு: அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர், டிச.15- திருப்பூர் அவிநாசி சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றும் முடிவை கைவிட வேண் டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு  ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமை வகித் தார். இதில், அனைத்து கட்சியினர் சார்பில்  அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் அவிநாசி சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்ற ஆலோசனைகள் வழங்கு மாறு மாநகர போலீஸ் சார்பில் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப் பில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த  மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் மற்றும்  விபத்துகள் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை  கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. உடுமலை புக்குளம் பகுதியை சோ்ந்த  பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப் பதாவது, நாங்கள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள். உடுமலை வெங்கிட்டாபுரம் கிராமத்தில் 50 நிலத்தை ஏக்கர் ஒரே குடும் பத்தை சேர்ந்தவர்கள், எஸ்.சி. மற்றும் எஸ்.டி.  மக்களுக்கு வழங்கப்பட்ட கண்டிசன் பட்டா பூமியினை சட்டவிரோதமாக போலி ஆவ ணங்கள் தயார் ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். இதை ரத்து செய்ய வேண்டும். எங்க ளுக்கு விவசாய பூமி ஒரு ஏக்கர் வழங்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது. திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் எதிரில் கடந்த 37 ஆண்டுகள் மாவட்ட சித்த தலைமை மருத்துவமனை, சித்த மருத்துவர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி  மருத்துவமனையை காலி செய்ய நோட்டீஸ்  வழங்கி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்  சித்த மருத்துவமனை கட்டுவதற்கு திருப்பூர்  தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவ கல்லூரி பின்புறம் இடம்  உள்ளது. அந்த இடத்தை ஒதுக்கி போர்க்கால  அடிப்படையில் மருத்துவமனை கட்டி மக்கள்  பயன்பாட்டிற்கு விட வேண்டும் ஆதித்தமிழர்  ஜனநாயகப் பேரவையினர் மனு அளித்த னர். நல்லூர் விஜயாபுரத்தை சேர்ந்த விஸ்வ நாதன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  நல்லூர் கிராமத்தில் எனது தகப்பனார் பொன் னுச்சாமிக்கு சொந்தமான 15 சென்ட் நிலம்  கண்டிஷன் பட்டாவாக உள்ளது. இதனை அயன் பட்டாவாக கொடுக்க வேண்டும். திருப் பூர் நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்ய தடையின்மை சான்றி தழ் தேவைப்படுகிறது. எனவே எனது தகப்ப னாருக்கு பாத்தியப்பட்ட நிலத்தை குடும்ப தான செட்டில்மெண்ட் விடுதலை ஆவணம் பதிவு செய்ய அயன் பட்டா மற்றும் தடை யின்மை சான்று விரைவாக வழங்க வேண்டும்  என குறிப்பிடப்பட்டுள்ளது. தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகு தியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, தாராபுரம் சின்னக் கம்பாளையம் செட்டி தோட்டம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால்  பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகிறோம்.  இதுதவிர ஈ தொல்லையும் அதிகம் உள்ளன.  இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கோழிப்பண்ணையை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.