முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

31 May 2026, 8:04 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

ஒரு ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமே இல்லை. கருத்து வேறுபாடுகள், கருத்தியல் ரீதியிலான மாறுபாடுகள் மற்றும் போராட்டங்கள் ஆகியவை ஒரு ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பின் அடையாளங்கள் ஆகும். ஆனால் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பாஜக செல்லும் இடங்கள் இப்படி தான் போலும்.

திரிணாமுல் எம்.பி., சகாரிகா கோஷ்

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அபிஷேக் பானர்ஜியை பாஜகவினர் தாக்கிய போது காவல்துறை எங்கே போயிருந்தது? அச்சம், வன்முறை மற்றும் சட்டமின்மை ஆகியவற்றின் மூலமாக மேற்கு வங்கத்தை ஆள வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா?

சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த்

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. வாக்குறுதிகள் பற்றி மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பிரச்சாரத்தின் போது நிறைய பேசினார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றவுடன் குண்டர் ஆட்சி தான் ஆரம்பமாகியுள்ளது.

நாகா மாணவர் முன்னணி

வாக்காளர்களை தேர்வு செய்ய, எம்எல்ஏக்கள் - எம்பி.,க்களை விலைக்கு வாங்க, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க, தேர்தலுக்குப் பின் வன்முறை மூலம் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்த, மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி நன்கொடை வசூல் செய்ய மற்றும் எதிர்கட்சிகளை ஒடுக்க மட்டுமே பாஜகவிற்கு தெரியும். சட்டத்தின் ஆட்சி என்றால் பாஜகவினருக்கு புரியக்கூட வாய்ப்பில்லை.

Share
FacebookXWhatsAppTelegram