முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

yesterday
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவதாக பரவிய வதந்திகள் அனைத்தும் சரத் பவாருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சியே. சரத் பவாரின் உடல்நிலையை சாதகமாக எடுத்துக்கொண்டு பாஜக அரசியல் ஆதாயத்திற்காக வதந்தியை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

தி ஜாமியா ஊடகம்

ராகுல் காந்தி நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். அவர் தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாஜகவோ ராகுல் காந்தி காலில் அணிந்துள்ள காலணியின் (ஷூ) விலை குறித்து விவாதித்து, அவர் ராஜா போன்று வாழ்வதாக கூறுகின்றது. இது பாஜகவின் அரசியல் தெளிவு மிக மோசமான அளவில் சரிந்து வருவதையே காட்டுகிறது.

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய்

நாட்டு மக்களுக்குத் தீர்க்கப்பட வேண்டிய பல முக்கியப் பிரச்சனைகளும், கவலைகளும் உள்ளன. ஆனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ள கேள்விகளுக்கு ஒன்றிய பாஜக அரசிடம் பதில்கள் இல்லை என்று தெரியும். அதனால்தான் இன்னும் கூட்டத்தொடர் அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ்

இஸ்ரேலிடமிருந்து ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை மோடி அரசாங்கம் வாங்கியதாகவும், அதன் மூலம் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் முன்பு செய்திகள் வெளியாகின. தற்போது ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அரசாங்கம் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram