முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

23 May 2026, 9:31 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி., சகரிகா கோஷ்

கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தாத ஒரு தலைவரைக் கொண்ட மோடி அரசு, இளைஞர்களால் வழிநடத்தப்படும் ஒரு மாற்றுக்கருத்துத் தளத்தை (கரப்பான் பூச்சி) ஒடுக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தன்னைத்தானே ‘உன்னதத் தலைவர்’ என்று சொல்லிக்கொள்பவர் கரப்பான் பூச்சியால் தெளிவாகப் பயந்துபோயுள்ளார்.

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

தேசத்துரோகம் பற்றி பாஜகவினர் அதிகம் பேசுகின்றனர். எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுக்கின்றனர். ஆனால் நாட்டைத் திட்டமிட்டுப் பணவீக்கம், விலைவாசி உயர்வு என்னும் நெருப்புக்குள் தள்ளுவது தேசத்துரோகம் இல்லையா?

நாகா மாணவர் முன்னணி

தவறு என்றால் அரசு ஒரு இணையத்தை, ஊடகத்தை குறுகிய காலத்திற்கு முடக்கி வைக்கலாம். ஆனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள கணக்கு ஹேக் (திருட்டு) செய்யப்பட்டுள்ளது. இது எப்படி? ஹேக் செய்யச் சொன்னது யார்? கட்சியாக அங்கீகாரம் செய்யப்படாத கரப்பான் பூச்சிக்கே இவ்வளவு பயமா? பரிதாப நிலையில் பாஜக.

சமூக ஆர்வலர் முகமது ஆசிப் கான்

உத்தரப்பிரதேச மாநிலம் கங்கை நதிக்கரையில் இப்தார் விருந்து ஏற்பாடு செய்ததற்காக முஸ்லிம்கள் பல வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அதே கங்கை நதிக்கரையில் இந்துத்துவா குண்டர்கள் மது அருந்தியுள்ளார்கள். ஆனால் பாஜக அரசு அமைதி காக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram