தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

4 Feb 2026, 3:49 pm
எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
<p><strong>எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்</strong></p> <p>புதுதில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட தைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் போராட்ட முழக்கங்கள் எழுப்பியதால் &nbsp;புதன்கிழமை அன்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ராணுவ முன்னாள் தலைமை தளபதி நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில் சீனா - இந்தியா எல்லையில் பதற்றம் உரு வான போது பிரதமர் மோடி முறையாக வழிகாட்டவில்லை என்பதை குறிப்பிட்டி ருந்தார். அந்த புத்தகத்தை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட அனுமதி வழங்கவில்லை. &nbsp;அது குறித்து &nbsp;நாடாளுமன்றத்தில் பேச &nbsp;ராகுல் காந்தி வலியுறுத்தினார். அப்போது அவையின் விதிகளை மீறியதாகவும், அவைத் தலைவரை நோக்கி காகிதங்க ளை வீசியதாகவும் கூறி பட்ஜெட் கூட்டத் தொடரின் மீதமுள்ள காலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதனன்று இந்த எம்.பி.க்கள், பிரதமர் மோடி அமெரிக்கா உடன் சமரசம் செய்து கொண்டார் என்பதை குறிப் பிடும் வகையில் &ldquo;பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் &ldquo; (PM is compromis ed) என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்ச னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பும் போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க ஆளும் கட்சி முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.