தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் குறித்து விவாதம் தேவை அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

30 Nov 2025, 3:38 pm
எஸ்ஐஆர் குறித்து விவாதம் தேவை அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
<p><strong>எஸ்ஐஆர் குறித்து விவாதம் தேவை அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்</strong></p> <p>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் &nbsp;தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு ஞாயிறன்று தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளா கத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு தரப்பிலிருந்து அமைச் &nbsp;சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, &nbsp;கிரண் ரிஜிஜூ, எல்.முருகன், அர்ஜுன் &nbsp;ராம் மேக்வால் ஆகியோர் பங்கேற்றனர். அதே போல &nbsp;காங்கிரஸ், இடதுசாரிகள், &nbsp;திமுக உள்ளிட்ட 36 அரசியல் கட்சிகளைச் &nbsp;சேர்ந்த 50 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) &nbsp;பற்றிய விவாதம் தேவை என்று அனை த்து எதிர்க்கட்சிளும் வலியுறுத்தின. மேலும், அண்மையில் தில்லியில் நிக ழ்ந்த கார் குண்டுவெடிப்பைச் சுட்டிக் &nbsp;காட்டி தேசிய பாதுகாப்பு, எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி &nbsp;மறுக்கப்படுவது உள்ளிட்ட விவகா ரங்களும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்கக்ட்சிகள் குறிப்பிட்ட விவ காரங்கள் பற்றி விவாதம் குளிர்கால கூட்டத்தொடரின்போது நடத்தப்படுமா என்பதற்கு அரசு தரப்பிலிருந்து உத்த ரவாதம் அளிக்கப்படவில்லை. ஆனால் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, &rdquo;குளிர்கால கூட்டத்தொடர் முடக்கமின்றி நடைபெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்&rdquo; &nbsp;என்று அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.