தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 May 2026, 10:09 pm

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்

தேசபக்தியின் பெயரால் மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயுவைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமாம். ஆனால் மோடி ஜி மட்டும் லட்சக்கணக்கான மக்களைத் தனது பேரணிகளுக்கு அழைத்து வருவாராம். வெளிநாட்டுப் பயணம் செல்வாராம்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என மோடி பேசிய அதே தினத்தில் அதற்கு நேர்மாறாக அவர் விமானம், ஹெலிகாப்டர்களில் பயணித்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பெரிய அளவில் அதிக வாகனங்களுடன் சென்றார்.

ஆர்ஜேடி எம்பி மனோஜ் குமார் ஜா

நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அரசு தனது செலவுகளை குறைத்ததாக தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக அனைத்து செய்தித்தாள்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செலவை யார் ஏற்கிறார்கள்? சாமானிய மக்கள் தானே?

சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ்

பிரதமர் மக்களுக்கு ஏழு கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் மோடி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.