தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

சிஜேபி செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ்

நாடாளுமன்றம் என்பது இந்தியாவின் மக்களுக்குச் சொந்தமானது. ஜூலை 20 அன்று மாணவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும். மவுனமாக இருந்து சாதிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் வெறுமென விடமாட்டோம்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக என்றால் “பிரஷ்ட் (ஊழல்), ஜுல்ம் (ஒடுக்குமுறை) மற்றும் பாப் (பாவம்)” என்று அர்த்தம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பெரும் முறைகேடுகள் உள்ளன. பல பிரச்சனைகளுக்கு பாஜக அரசின் கொள்கைகளே காரணம். பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் உத்தரப்பிரதேசத்தின் நிலைமை மேம்படும்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

மோடி - ஷா தலைமையிலான பாஜக இந்தியாவில் 2 வகையான குண்டர்களை உருவாக்கியுள்ளது. ஒன்று, மக்களை அடித்துக் கொல்லும், தெருக்களில் உலாவும் குண்டர்கள். மற்றொன்று, இணையத்தில் மக்களை அவதூறாகப் பேசி மிரட்டுவதுடன் தவறான தகவல்களைப் பரப்பும் ஆன்லைன் குண்டர்கள்.

மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் ஜா

இடைத்தேர்தல்கள் எப்போதும் முக்கியத்துவம் அற்றவை அல்ல. அவை கடந்த காலத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்துள்ளன. பங்கிப்பூர், தாதியா ஆகியவை மோடி-ஷா பாணி அரசியலின் மீதான அதிருப்தியைக் குறிக்கின்றன. சமமான களம் அமைந்தால், எதிர்காலத்தில் பாஜக கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடலாம்.