முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

13 Jun 2026, 8:56 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

சாம்ராட் சவுத்ரி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே, பீகார் பாஜக கூட்டணி அரசு என்கவுண்டர்கள் மூலம் குறிப்பிட்ட சாதியினரையும், சமூகத்தினரையும் குறிவைத்து கொன்று வருகிறது. பீகாரின் வளர்ச்சிக்கான எந்தவொரு தொலைநோக்கு பார்வையும் அல்லது திட்டவரைவும் பாஜக அரசிடம் இல்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல, தங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ஓர் அரசு.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

நாட்டில் உச்ச அதிகாரத்தில் அமர்ந்தி ருப்பவர்களுக்கு (மோடி உள்ளிட்டோர்) குடும்பம் என்ற ஒன்று இல்லை. அவர்கள் குடும்பத்தை புறக்கணித்துள்ளனர் அல்லது விரட்டியுள்ளனர். குடும்பம் உள்ளவர்களால் மட்டுமே ஒரு குடும்பம் சந்திக்கும் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்ள முடியும்.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி

பாஜக தனது பாக்கெட்டுக்குள் புலனாய்வு முகமைகளை வைத்துக்கொண்டுள்ளது. நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டிய மத்திய நிறுவனங்கள் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; அதற்குப் பதிலாக, உண்மைக்காகப் போராடுபவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர்

அமெரிக்க கடற்படையால் 3 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடி அரசின் தற்போதைய எதிர்வினை கடந்த கால அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. அமெரிக்காவை எதிர்த்து பேசக் கூட மோடி அஞ்சுவது எதனால் என்று தெரியவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram