தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையரை சிறையில் அடைக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

25 Sept 2026, 10:49 pm
தலைமைத் தேர்தல் ஆணையரை சிறையில் அடைக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தலைமைத் தேர்தல் ஆணையரை சிறையில் அடைக்க வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் சுமார் 14 முறை பல்வேறு உத்தரவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தைக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இதற்குப் பதிலளிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் யாருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்? எந்தக் கட்சியின் வெற்றிக்காக இத்தகைய முடிவுகளை எடுத்தார்? என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வாக்காளர் பதிவு, பெயர்கள் நீக்கம் மற்றும் எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் குறித்து இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுப்பியுள்ள ஆட்சேபனைகள் பற்றிய தகவல்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, எஸ்ஐஆர் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும், தவறாகப் பெயர் நீக்கப்பட்டவர்களின் வாக்களிக்கும் உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும்; அதேசமயம் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும் நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். வாக்களிக்கும் உரிமை இந்திய மக்களுக்கு உரியது. பாஜக மற்றும் சங்பரிவாரின் அரசியல் நலன்களுக்காக அதனைத் தவறாகப்பயன்படுத்தவோ தட்டிப்பறிக்கவோ முடியாது.பினராயி விஜயன் (சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)

தேர்தல் ஆணையத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமானவர்கள் தாங்களாகவே முன்வந்து பதவி விலக வேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரும்பும் அனைவரும் இதையே வலியுறுத்துகிறார்கள். நாட்டில் தேர்தல் என்ற ஜனநாயகத் திருவிழா பறிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும். அவர் தேர்தலையே பறித்துவிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை, பாஜக எவ்வாறு அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்க நினைக்கிறது என்பதையும், பிரதமர் மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜனநாயக அமைப்பை எவ்வாறு அழித்து வருகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இது சாதாரணமாகக் கடந்து செல்லும் நிகழ்வு அல்ல. ஞானேஷ் குமார் கைது செய்யப்பட வேண்டும்; சிறையில் அடைக்கப்பட வேண்டும்.தேஜஸ்வி பிரசாத் (ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர்)

தேர்தல் ஆணையர்களுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஒடிசாவில் எஸ்ஐஆருக்குப் பின் 27 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாகப் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், தேர்தல் ஆணையம் 20 லட்சம் வாக்குகள் மட்டுமே நீக்கியதாகத் தரவுகளை அளித்தது. இது போலியானது. 7 லட்சம் வாக்குகள் மூலம் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. எஸ்ஐஆர் என்பது சாதாரண முறைகேடு அல்ல; அது ஒரு பெரும் ஊழல். அதனால் எஸ்ஐஆர் நடைமுறை விரிவாக மீண்டும் சீராய்வு செய்யப்பட வேண்டும்.நவீன் பட்நாயக் (பிஜு ஜனதா தளம் தலைவர்)

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்த முறையில் அத்துமீறல்கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால், தற்போது நடைபெற்று வரும் எஸ்ஐஆர் செயல்முறையைக் கைவிட வேண்டும். அதேபோல, குற்றம்சாட்டப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தவும், எஸ்ஐஆர் நடைமுறையை மீண்டும் புதிதாகத் தொடங்கவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வரும் தேர்தல்களை வாக்குச் சீட்டு முறையில் நடத்துவதை உறுதி செய்ய, அரசியல் கட்சிகள் பெருமளவிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.ராஜ் தாக்கரே (மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர்)

1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் வழக்கமான குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, அரசியலமைப்பின் 326ஆவது பிரிவில் திருத்தம் கொண்டுவந்து, குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்த ஒரு பிரதமர் (ராஜீவ் காந்தி) இருந்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்த பிரதமர் அவர்தான். மற்றொரு பிரதமரோ, ‘ஜென் ஸி’ தலைமுறை வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாமல் தடுப்பதற்காக, 2024ஆம் ஆண்டிற்குப் பிறகு வாக்காளர் பட்டியலின் ‘சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்’ முடங்கியே இருப்பதை உறுதி செய்துள்ளார். இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆசைகளையும் தகர்த்தெறிந்ததால், இளைஞர்களைக் கண்டு பயப்படும் பிரதமர் இவர் (மோடி). அதாவது, ஒரு பிரதமர் இளைய தலைமுறைக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார்; மற்றொரு பிரதமரோ வஞ்சகத்தினாலும் சதித்திட்டத்தினாலும் அதனைப் பறிக்க முற்படுகிறார்.

2014, 2018 மற்றும் 2024 தேர்தல்களில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டுகள் மூலம் ஷேக் ஹசீனாவை மூன்று முறை பிரதமராக்கியவர் கே.எம். நூருல் ஹுதா. இந்த ‘வில்லன்’ மீது வங்கதேச மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். 2018ஆம் ஆண்டின் கேடுகெட்ட “நள்ளிரவு வாக்குப்பதிவு” நிகழ்வு கூட இவரது பதவிக் காலத்தில்தான் நடந்தது. ஆகஸ்ட் 2024-இல், வங்கதேசத்தில் மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். ஜூன் 2025-இல், ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் நூருல் ஹுதாவை அவரது வீட்டிலிருந்து லுங்கியுடன் மட்டுமே வெளியே இழுத்து வந்தது. அவர்கள் அவரது கழுத்தில் மரக்கட்டை மாலையைப் போட்டு, செருப்புகளால் அடித்து, அவர் மீது முட்டைகளை வீசினர். காவல்துறை தங்களின் தலைக்கவசம் மற்றும் கவச உடைகளை அவருக்கு வழங்கி, அவரது உயிரை நூலிழையில் காப்பாற்றியது. அதே நாளில், மக்களின் விருப்பமின்றி 2014, 2018 மற்றும் 2024 தேர்தல்களை நடத்தியதாகக் கூறி, ஷேக் ஹசீனா, மூன்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராகப் பிஎன்பி கட்சி வழக்குத் தொடர்ந்தது. நூருல் ஹுதா காவல்துறையின் காவலுக்குச் சென்றார். பின்னர், அழுத்தத்தின் காரணமாகவே 2018 தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டது என்பதை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அன்றிலிருந்து, இந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் வங்கதேசச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதால், தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தின் பாதுகாவலன். அது ஒருதலைப்பட்சமாக மாறும்போதோ அல்லது அழுத்தங்களுக்குப் பணியும்போதோ, மக்களின் கோபம் எவ்வாறு வெடிக்கும் என்பதற்கான தெளிவான உதாரணம் கே.எம். நூருல் ஹுதாவின் நிலைமை.

நாடு முழுவதும் தேர்தல்களைக் கொள்ளையடித்த குற்றத்திற்காக ஞானேஷ் குமார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட வேண்டும். தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் பாஜக நேர்மையற்ற முறையிலேயே வெற்றி பெற்றுள்ளது; இந்தத் தேர்தல்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட வேண்டும். மோடி “பிரபலத்தன்மையால்” வெற்றி பெறவில்லை, மாறாக “கொள்ளையடிக்கும் அணுக்கத்தன்மையாலேயே” தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவர்)

இந்தியாவில் தேர்தல்களில் முறைகேடுகள் நடக்கின்றன. ஆனால், தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறிக்கொண்டே அதில் அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து பங்கேற்பது, அந்த முறைகேடான தேர்தல்களுக்கே சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதாக அமையும். வாக்குகள் திருடப்பட்டு, சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டு, கட்சிகளே உடைக்கப்படும்போது, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடையாளம் அழிந்துவிடும் என்று அஞ்சுவதில் அர்த்தமில்லை. அரசியல் கட்சிகள் சாதகமான மாநிலங்களில் மட்டும் குரல் கொடுத்துவிட்டு மற்ற இடங்களில் அமைதியாக இருப்பதும் தவறானது. சொந்த அரசியல் இருப்பை விட நாட்டின் ஜனநாயகமே முக்கியம். எனவே, ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, முறைகேடான தேர்தல்களில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்துவது நல்லது.

அபிஜீத் திப்கே (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.