முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

5 Aug 2026, 8:29 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி எம்.பி., மனோஜ் ஜா

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற அவையில் ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்துவாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது? ஜம்மு-காஷ்மீர் என்பது வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல. அது மக்களின் இல்லமாகும்; அவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளிக்கவேண்டும். பிரதமர் மோடியும் இது போன்ற விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்ற வேண்டும். ஆனால் இருவரும்நாடாளுமன்றத்திற்கு வராமல் நாட்டின் பிரச்சனைகள் குறித்த பொறுப்பிலிருந்து நழுவுகிறார்கள்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

நாட்டில் அரசியல் கட்சிகளின் நிலை மோசமாக உள்ளது. மக்கள் காலையில் ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால் மாலையிலோ வேறு யாரோ அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு பெயர் அரசியல் போன்று தெரியவில்லை. எம்.பி.,எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது பெரிய விஷயம் அல்ல. மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.

ராய்ஜோர் தளம் கட்சி

கடல் இல்லாத குட்டித் தீவாக அசாம் மாறிவிட்டது. காரணம் அந்தளவுக்கு கனமழை மாநிலத்தை துவம்சம்செய்துள்ளது. மக்கள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடி வருகின்றனர். வீடு, கால்நடை, விவசாய நிலங்களை வெள்ளநீருக்குள் தேடி வருகின்றனர். ஆனால் அசாம் பாஜக முதலமைச்சரோ சுரங்கத் தொழில் பற்றி பேசி வருகிறார். பணவெறியில் உள்ள பாஜகவினர் மக்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்?

Share
FacebookXWhatsAppTelegram