முந்தய பக்கம்

உத்தரகண்ட் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்! - வலுக்கும் கண்டனம்

22 Dec 2025, 1:47 pm
உத்தரகண்ட் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்! - வலுக்கும் கண்டனம்
<p>உத்தரகண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதையில் உள்ள வாசகங்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற அம்மாநில பாஜக அரசின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.<br /> உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பகவத் கீதையில் உள்ள வாசகங்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்றும், சமஸ்கிருத மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் பகவத் கீதை வாசகங்களை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், பள்ளியின் அறிவிப்பு பலகையில் வாரத்திற்கு ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.<br /> பள்ளிகளில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் நிலையில், இத்தகைய நடவடிக்கை பொருத்தமற்றது; அரசியலமைப்பின் மதச்சார்பற்ற உணர்வுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram