அமெரிக்காவின் அடாவடித்தனமான வரி விதிப்பை எதிர்ப்பது நம் தொழிலையும், மக்களையும் பாதுகாக்கும் போராட்டமாகும்
22 Jan 2026, 2:57 pm

அமெரிக்காவின் அடாவடித்தனமான வரி விதிப்பை எதிர்ப்பது நம் தொழிலையும், மக்களையும் பாதுகாக்கும் போராட்டமாகும்

திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.கண்ணன் பேச்சு

திருப்பூர், ஜன.22 – அமெரிக்காவின் அடாவடித்தனமான வரி விதிப்பை எதிர்ப்பது என்பது நம் தொழிலை யும், வேலைவாய்ப்பையும், மக்கள் வாழ்வா தாரத்தையும் பாதுகாக்கும் போராட்டமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண் ணன் கூறினார். திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசி யது: அமெரிக்க்காவின் அடாவடித்தனமான வரி விதிப்பை எதிர்ப்பது என்பது ஒரு ஏகாதிபத் திய எதிர்ப்புப் போராட்டமாகும். கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானது முதலே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக நீடித்து நடத்தி வருகிறது. திருப்பூர் தியாகி குமரன் மூவர்ணக் கொடியை காப்பதற்காக பிரிட்டீஷ் ஏகாதிபத்திய போலீசின் தாக்குத லில் மாண்டார். ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவாரத்திற்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வரலாறு இல்லை. அவர்களுக்கு காட்டிக் கொடுத்த வரலாறுதான் இருக்கி றது. இப்போதும் டிரம்ப் இந்தியாவுக்கு 50 சத விகித வரி விதித்தபோதும், 500 சதவீதம் வரி விதிப்பேன் என்று சொல்லும்போதும் இது வரை டிரம்ப்பை எதிர்த்து மோடி பேச வில்லை. பேசவும் மாட்டார். காஸாவில் 70 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோதும், இறையாண்மை மிக்க வெனிசூலா நாட்டின் அதிபர் மது ரோவை அடாவடித்தனமாக கைது செய்து சிறை பிடித்தபோதும் மோடி அரசு ஒரு சின்ன கண்டனக் குரலையாவது எழுப்பியதா? 300 ஆண்டுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டப் பாரம்பரியம் கொண்ட இந்த நாடு இன்று மோடி, பாஜக கையில் சிக்கி இருக்கி றது. நான்தான் பாகிஸ்தான் – இந்தியா போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் 58 முறை கூறியபோதும், மோடி வாய்திறக்கவில்லை. 140 கோடி மக்கள் கொண்ட நாட்டின் பிரதமர், எங்கள் நாட்டு விசயத்தை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று சொல்லும் துணிச் சல் மோடிக்கு இருக்கிறதா? தேர்தல் நேரத் தில் வாய்ச்சவடால் பேசுவதைத் தவிர அடிப் படை பிரச்சனைகளில் பேசத் துணிவில்லா தவர். கேடுகெட்ட சித்தாந்தத்தை கொண்ட வர்கள்தான் ஆர்எஸ்எஸ்., பாஜகவினர். ரஷ் யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், 500 சதவிகிதம் வரி விதிப் பேன் என்று பேசும் திமிர் டிரம்புக்கு எங்கி ருந்து வந்தது? ஜவுளித் தொழிலை பாதுகாக்க, வேலை வாய்ப்பை பாதுகாக்க கம்யூனிஸ்ட்டுகள் போராடுகிறோம். அமெரிக்காவின் அடாவ டித்தனமான நிலைபாட்டால் தொழில் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு தரிசாகும். தொழிலை பாது காக்க, பல லட்சம் குடும்பங்கள் வாழ்வைப் பாதுகாக்க போராடுகிறோம். தொழில் துறை யினர் சிந்திக்க வேண்டும். இது போன்ற போராட்டங்கள் மூலம்தான் இந்தியாவை பாதுகாக்க முடியும். மோடி அரசை நிர்பந்தப் படுத்த முடியும். விநாயகர் சதுர்த்தி என்று கலவரத்தை ஏற் படுத்த முயலும் இந்து முன்னணி என்றைக் காவது நாட்டைப் பாதுகாக்க, இது போன்ற பிரச்சனைகளில் பேசியதுண்டா? அமெரிக்க வரி விதிப்பினால் ஜவுளி உள்ளிட்ட இதர துறைகளில் 20 லட்சம் வேலையிழப்பு ஏற் படும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதம ருக்கு கடிதம் எழுதினார். அதற்கு மோடி பதில் எழுதினாரா? நாட்டின் வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், அமெரிக்க வரி பிரச்சனை பற்றி பேச வேண்டிய முக்கியமான துறையை சேர்ந்த வர், சென்னைக்கு வந்து டி.டி.வி.தினகரன் எங் கள் கூட்டணிக்கு வந்துவிட்டார் என்று பேசுகி றார். வெட்கக்கேடு அவமானம். அமெரிக்காவின் வர்த்தகச் சூழ்ச்சியை எதிர்க்கும் துணிச்சல் மோடிக்கு இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக நாட்டை அடமானம் வைக்கப் போகிறார். பாஜக அரசு ஏகாதிபத்தியத்துடன் வைத்தி ருக்கும் கூட்டணி என்பது நம் நாட்டை, நாட்டு மக்களை, தொழிலை, தொழிலாளர்களை, விவசாயத்தை, விவசாயிகளை அழிக்கக்கூ டியது. அமெரிக்காவுடன் எப்டிஏ என்ற பெயரில் கட்டடற்ற வர்த்தக உடன்பாடு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எப்டிஏ ஏற்பட்டால் ஊத் துக்குளி நெய், காங்கேயம் காளை போன்ற புவிசார் குறியீடு இருக்காது. திருப்பூர், தாரா புரம், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ண கிரி, தருமபுரி, திருவண்ணாமலை என பால் உற்பத்தி மண்டலமாக திகழும் இப்பகு தியில் வீட்டு கால்நடை வளர்ப்புப் பொருளா தாரம் பாதிக்கப்படும். எனவேதான் அடாவடி அமெரிக்காவை கண்டித்து நம் நாட்டையும், நாட்டு மக்களை யும் பாதுகாக்க கம்யூனிஸ்டுகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்தி களும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று எஸ்.கண்ணன் கூறினார்.