அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்; சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!
14 Jun 2026, 9:13 pm

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்; சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!

மகத்தான உலகப் புரட்சியாளர் தோழர் சே குவேரா பிறந்த நாளையொட்டி, ஜுன் 14 ஞாயிறன்று, சோசலிச கியூபாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு கண்காட்சியை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மதுரையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் புரட்சியாளர் சே குவேரா உருவப்படத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்து பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கம்யூனிஸ்ட்டுகள். உடன் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்டோர்.

கோயம்புத்தூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கியூப ஆதரவு சிறப்புக் கருத்தரங்கில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், என்சிபிஎச் நிறுவனத்தின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். சிபிஐ மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, சிபிஐ (எம்எல்) மாவட்டக்குழு உறுப்பினர் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.