தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர்விரைவு செய்திகள்

31 Mar 2026, 4:50 pm
கோயம்புத்தூர்விரைவு செய்திகள்

சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், மார்ச் 31- பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகை யில், கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் கேரளாவின்  கொல்லம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும்  போத்தனூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதன்படி வண்டி எண் 07347 ஹூப்ளி – கொல்லம்  சிறப்பு ரயில் ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 07:05  மணிக்கு ஹூப்ளியிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 07:00 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கமாக வண்டி எண் 07348 கொல்லம் – ஹூப்ளி  சிறப்பு ரயில் ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 10:45 மணிக்கு  கொல்லத்திலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை  10:40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். ஹாவேரி, தேவனகிரி, பெங்களூரு, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு மற்றும் எர் ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் இந்த  ரயில்கள் நின்று செல்லும். இதேபோன்று வண்டி எண் 06113 சென்னை எழும் பூர் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் 2  ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு சென்னையில் இருந்து  புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 06:00 மணிக்கு திரு வனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக வண்டி  எண் 06114 திருவனந்தபுரம் வடக்கு – சென்னை எழும் பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 05:15 மணிக்கு  திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள்  காலை 11:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடை யும். இந்த ரயில்கள் சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட  முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என  சேலம் கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பாளர் மரியா  மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

காட்டுமாடு தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

உதகை, மார்ச் 31- கோத்தகிரி அருகே காட்டுமாடு தாக்கியதில் மூதாட்டி ஒரு வர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (89). இவர்  திங்களன்று மாலை கெரடாமட்டம் பகுதியிலுள்ள ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு, மீண்டும் வீடு  திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சுகாதார நிலையத் திற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்த காட்டு மாடு இவரை  தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த நிலையில், அரு கிலிருந்தவர்கள் மீட்டு கெராடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இச்சம்பவம் ஈளாடா பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீப காலமாக குடியிருப்பு, சாலைகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப் படுகிறது. இதனை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக் குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், உயிரிழந்த நபருக்கு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

உதகை, மார்ச் 31- நேபாளம் நாட்டை சேர்ந்த சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை  மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேபாளம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி,  நீலகிரி மாவட்டம், உதகை பகுதியில் வாட கைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். 20 வருடங்களாக வசித்து வந்த இந்த தம்பதிக்கு, 14 வயதில் ஒரு மகள் மற்றும் 13 வயதில் ஒரு மகன் உள்ள னர். இருவரும் உதகையிலுள்ள ஒரு பள்ளி யில் படித்து வருகின்றனர். தம்பதிகள் இரு வரும் கேரட் அறுவடை பணிக்காக இரவு 7  மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, அதி காலை 4 மணிக்கு வீடு திரும்புவார்கள். இத்தம்பதிக்கு அறிமுகமான ஒருவரின் வீடு பக்கத்தில் உள்ளது. அங்கு நேபாள  தம்பதியின் குழந்தைகள் அவ்வப்போது சென்று வருவார்கள். அப்போது பக்கத்து வீட்டிற்கு உறவினராக வந்த ஹரிஷ் என்பவர்,  14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து  கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  ஆனால், ஹரிசுக்கு ஏற்கனவே திருமணமாகி  குழந்தைகள் உள்ளதால் சிறுமி மறுத்துவிட் டார். இதனிடையே, பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுமி தனியாக  இருந்தபோது, அங்கு வந்த ஹரிஷ் சிறுமியை  மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். இதுகுறித்து வெளியில் கூறினால் குடும் பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பயந்து போன சிறுமி  இது குறித்து யாரிடமும் எதுவும் கூற வில்லை. இதை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டு பலமுறை சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பரி சோதனைக்கு அழைத்து சென்றதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உதகை அனைத்து  மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குபதிவு செய்து ஹரிசை கைது  செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகையிலுள்ள மகளிர் விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்களன்று வழங்கப் பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஹரிசுக்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண தொகை  வழங்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தவெக-வினரின் சேட்டை: பயணிகள் ஓட்டம்

தருமபுரி, மார்ச் 31- பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி தவெகவினர் பட்டாசு வெடித்ததில், ஏற்பட்ட தீப்பிழம்புகளால் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக கஜேந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, திங்களன்று மாலை பென்னாகாரத்திற்கு வந்திருந்த வேட்பாளரை வர வேற்கும் வகையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர். வேட்பாளரின் கார் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தபோது, தவெக-வினர் பட்டாசு களை வெடிக்கத் தொடங்கினர். திடீரென பல திசைகளில் பறந்த தீப்பிழம்புகள், சாலையோரத்தில் நின்றிருந்த வாகன ஓட்டிகள், கடைகள், பேருந்துகளுக்காக காத்திருந்த பயணி கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்களின் மீது  விழுந்ததில் அலறியடித்து ஓடினர். அதைத்தொடர்ந்து அக்கட் சியினர் அனுமதியின்றி சாலை வலம் தொடங்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.