சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி திறப்பு
23 Feb 2026, 5:35 pm
<p><strong>சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி திறப்பு</strong></p>
<p>கும்பகோணம், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாதான வீதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியினை, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன், திருவிடைமருதூர் பேரூராட்சித் தலைவர் புனிதா மயில்வாகனன், வட்டாட்சியர் சாந்தமீனா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெயசீலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஸ்ரீதர் , பேரூராட்சி செயலர் எம். ராஜதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
