மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
13 Feb 2026, 5:58 pm
<p><strong>மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு</strong></p>
<p>புதுச்சேரி, பிப். 13- புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன், மங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்காஞ்சி கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 2.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைத் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் திறந்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் இலட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
