முந்தய பக்கம்

புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

10 Mar 2026, 3:51 pm
புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு
<p><strong>புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு</strong></p> <p>தருமபுரி, மார்ச் 10- பாப்பாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட சார் பதி வாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பதிவுத் துறையின் சார்பில், புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதனை செவ்வாயன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பாப் பாரப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சேலம் மண்டல துணை பதிவுத்துறைத் தலைவர் சுபிதா லட்சுமி, தருமபுரி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) வெங்கடேசன், மாவட்ட பதிவாளர் (தணிக்கை) கனக ராஜ், பாப்பாரப்பட்டி சார் பதிவாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram