மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் திறப்பு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் திறப்பு</strong></p>
<p>மயிலாடுதுறை மார்ச் 13- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.29.01 கோடி மதிப்பில், பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலெட்சுமி, நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p>
