ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
18 Mar 2026, 3:34 pm
<p><strong>ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு</strong></p>
<p>நாகர்கோவில் .மார்ச் .18 குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் இணைந்து நேர்மை யான தேர்தலை உறுதி செய்ய ஒருங்கி ணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் திறந்து வைத்தார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை தேர்தல் புகார் பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு, காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதனன்று திறந்து வைத்தார். தேர்தல் புகார் பிரிவு பொதுமக்கள் அவர்களுடைய சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா உட்பட ஏதேனும் தேர்தல் விதிமுறை மீறல்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த எங்களுக்கு பொது மக்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் .ஏதேனும் புகைப்பட வீடியோ ஆதா ரங்கள் இருந்தால் உடனடியாக அனுப்பி வைக்க முடியும். தகவல் கூறும் பொது மக்களுடைய தகவல்கள் ரகசியம் காக்கப்படும். தேர்தல் சம்பந்தமான அவதூறு கருத்துக்கள், தேர்தல் விதிமுறை மீறி சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு உடன டியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடு மையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவல் கட்டுப்பாட்டு அறை பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய தகவல்கள் மூலம் பிரச்சனைக்குரிய இடங்கள் அமைந்திருக்கக் கூடிய காவல் நிலைய எல்லைக்குள் பணியில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைந்துள்ளது. மேலும் அனைத்து சோதனை சாவடிகளையும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்(ம) வாட்ஸ் வாட்ஸ் அப் எண்கள், மாவட்ட எஸ் பி ஆர் .ஸ்டாலின் -8122223319, ஃபீட்பேக் சென்டர் - 7708239100, நாகர்கோவில் தொகுதி - 7358776100, குளச்சல் தொகுதி - 7358068100, கிள்ளியூர் தொகுதி - 7358034100, கன்னியாகுமரி தொகுதி - 7305282100, விளவங்கோடு தொகுதி - 7358063100,பத்மநாதபுரம் தொகுதி - 7397463100 மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வாய்ப்பினை ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்தி நேர்மையான தேர்தலை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.</p>
<p> </p>
