நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப கோபுரம் திறப்பு
2 Mar 2026, 3:30 pm
<p><strong>நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப கோபுரம் திறப்பு</strong></p>
<p>சென்னை, மார்ச் 2 - சென்னை நந்தம்பாக்கத்தில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரத்தை (ஃபின்டெக் டவர்) முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.249 கோடியில் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 2 அடித்தளங்கள், 3 மேடைகள் மற்றும் 9 தளங்களை கொண்ட இக்கட்டிடம் LEED பிளாட்டினம் பசுமைக் கட்டிட சான்றிதழுக்கு தகுதி பெறும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 250 பேர் தங்கக்கூடிய ஆடிட்டோரியம், உணவு அரங்கம், உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் இக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 2023 ஜூன் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப் பட்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன. நிதி மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கான மைய இடமாக இக்கோபுரம் செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.</p>
<p> </p>
