அங்காடிகள், பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு
8 Feb 2026, 3:55 pm
<p><strong>அங்காடிகள், பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.8 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட அலிவலம் ஊராட்சி மனவயல் நியாய விலைக் கடை, பூவா ளூர் கிழக்கு நியாய விலைக் கடை, அம்மையாண்டி ஊராட்சி செங்கமங்கலம் நியாய விலைக் கடை, இரண்டாம்புளிக்காடு ஊராட்சி புதிரிவயல் நியாய விலைக் கடை, புக்கரம்பை ஊராட்சி மேற்குடிக்காடு நியாய விலைக் கடை ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும், பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை, கூப்புளிக்காட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை ஆகியவற்றை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் ஆகியோர் சனிக்கிழமை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.</p>
