புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு
9 Jan 2026, 3:41 pm
<p><strong>புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், ஜன.9- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் நகராட்சியில் 1 ஆவது வார்டான சீனியாபுரம், 17 ஆவது வார்டான ஊரணி பட்டி ஆகிய இரு பகுதிகளில் 2024-25 கல்வி நிதியில் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையங் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழ மையன்று நடைபெற்றது .சீனியாபுரம் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை வார்டு உறுப்பினர் லூர்து மெர்சியா தலைமையிலும் ஊரணிபட்டி யில் கட்டப்பட்ட கட்டிடத்தை நகர்மன்ற துணைத்தலைவரும் வார்டு உறுப்பினரு மான செல்வமணி தலைமையிலும் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர்மன்ற ஆணையாளர் குமார், சுகாதார அலுவலர் கந்தசாமி, உதவிப்பொறியாளர் திவாகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்க்குழு உறுப்பினர் பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச்செயலாளர் மிக்கேல் ராஜ் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர், ஆசிரியை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
