இந்திய நவீனக் கல்வி வரலாறு, பாலஸ்தீன கண்காட்சிகள் திறப்பு
3 Dec 2025, 2:59 pm
<p><strong>இந்திய நவீனக் கல்வி வரலாறு, பாலஸ்தீன கண்காட்சிகள் திறப்பு</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.3 - தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு, டிச.4 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 16 ஆவது மாநில மாநாட்டு வரவேற்புக் குழு, இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து, “இந்திய நவீனக் கல்வி வரலாற்றுக் கண்காட்சி” தஞ்சை சரபோஜி கல்லூரி எதிரில், மாநகராட்சி பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வே.அர்ஜுன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வசந்த் வரவேற்றார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலா ளர் வீ.கரிகாலன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி கண்காட்சியை திறந்து வைத்தார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கருத்துரையாற்றினார். தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் பு.சந்தோஷ் குமார் நன்றி கூறினார். மாவட்டக் குழு உறுப்பி னர் பிம்பம் சாகுல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச்செயலாளர் பி. செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், தமுஎகச நிர்வாகிகள் களப்பிரன், ப.சத்தியநாதன், ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் “பாலஸ்தீனம் கண்காட்சி” திறப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் 16 ஆவது மாநில மாநாட்டு வரவேற்புக் குழு, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு இணைந்து, தஞ்சாவூர் அழகி குளம் மாநகராட்சி பூங்கா வில், புதன்கிழமை “பாலஸ்தீனம் கண் காட்சி” யை நடத்தியது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஹெச். அப்துல் நசீர் தலைமை வகித்தார். நிர்வாகி கள் ஏ.ஜாகிர் உசேன், எம்.கோஸ்கனி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ந. குருசாமி வரவேற்றார். மாநில பொதுச் செய லாளர் பி.செந்தில்குமார், மாமன்ற உறுப்பி னர் வி.செந்தில்குமாரி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கண்காட்சியை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மேனாள் தலைவர் மருத்துவர் ச.மருதுதுரை திறந்து வைத்தார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொருளாளர் எம்.ராம் நன்றி கூறினார்.</p>
