முந்தய பக்கம்

வேளாண் விளைப்பொருள் விற்பனை மையம் திறப்பு

2 Jan 2026, 3:33 pm
வேளாண் விளைப்பொருள் விற்பனை மையம் திறப்பு
<p><strong>வேளாண் விளைப்பொருள் விற்பனை மையம் திறப்பு</strong></p> <p>ஈரோடு, ஜன.2- பெருந்துறையில் கட்டப்பட்ட வேளாண் விளைப்பொருள் விற்பனை மையத்தை அமைச்சர் சு.முத்துசாமி வெள்ளியன்று திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் ரூ.49.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் விளைப்பொருள் விற்பனை மையம், 2 பகுதி நேர மற்றும் &nbsp;ஒரு முழு நேர நியாய விலைக்கடை கட்டிடங்களை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் சு.முத்துசாமி வெள்ளியன்று திறந்து வைத்தார். புங்கம்பாடி ஊராட்சி, பார வலசு கிராமத்தில் செயல்படும் முழு நேர நியாய விலைக்கடையில் 1,254 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. இக்கடையிலிருந்து பொருட் களை பெற்று வந்த பாரவலசு பகுதி மக்கள், புங்கம்பாடி நியாய விலைக் கடையிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர். இத னால் தங்கள் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை அமைத்து தர &nbsp;வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி யிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில், சுமார் 250 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு பகுதி நேர நியாய விலைக் கடையினை திறத்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தி யாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், சி.சரஸ்வதி, கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram