புதியதாக கட்டிய நியாய விலை கடை திறப்பு
27 Nov 2025, 3:11 pm
<p>உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வர கண்டநல்லூர் ஊராட்சி பெரியபட்டு கிராமத்தில் புதியதாக கட்டிய நியாய விலை கடையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எ.ஜே.மணிக்கண்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இ.சாந்தி இளங்கோவன்,ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தட்சணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் விஜய ஆறுமுகம் மற்றும் மேட்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.சாந்தசீலன், சிறுளாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், கூட்டுறவு சங்க அலுவலர்கள், நியாய விலை கடை விற்பனையாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெரியபட்டு கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
