தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கட்டடம் திறப்பு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கட்டடம் திறப்பு </strong></p>
<p>தஞ்சாவூா், நவ.16- தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வழக்கறிஞர்களுக்கான கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி வேல்முருகன் வரவேற்றுப் பேசினார். புதிய கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், சதீஷ்குமார், ராஜசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர். இதேபோல், திருவையாறு நீதிமன்ற வளாகத்தில் நூலகம், பாதுகாப்பு அறைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், கும்பகோணத்தில் பாதுகாப்பு அறை, கேண்டீன் ஆகியவற்றையும் தஞ்சையில் இருந்தவாறு திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியன், தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திராவிடச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி மகாலட்சுமி நன்றி கூறினார்.</p>
