திருவாரூரில் மதி அங்காடி திறப்பு
16 Dec 2025, 3:51 pm
<p><strong>திருவாரூரில் மதி அங்காடி திறப்பு</strong></p>
<p>திருவாரூர், டிச.16- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு அருகே, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மதி அங்காடி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. மகளிர் சுய உதவிக் குழுவினர் கைவினைப் பொருள்கள், பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் வகையில், இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பங்கேற்று, மதி அங்காடியைத் திறந்து வைத்தார். திமுக நகரச் செயலாளர் எஸ்.பிரகாஷ், நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
