ஏஐ தொழில்நுட்பத்தின் விளைவு இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓபன்டோர் நிறுவனம்
12 Jun 2026, 8:29 pm

ஏஐ தொழில்நுட்பத்தின் விளைவு இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓபன்டோர் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஓபன் டோர் (Opendoor)’ இந்தியாவில் உள்ள தனது செயல்பாடுகளை முழு மையாக மூடுவதாக அறிவித்துள்ளது. இதன்காரணமாக, இந்தியாவில் உள்ள அதன் அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த சுமார் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துவதன் மூலம் தனது வணிக மாதிரியை முற்றிலும் மாற்றி அமைப்பதற்காக, “ஓபன்டோர் 2.0” (Opendoor 2.0) என்ற பெயரில் புதிய கட்டமைப்பை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார் நெஜாடியன் கூறுகையில், “நிறு வனத்தின் முக்கியச் செயல்பாடுகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஒருங்கி ணைப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஒரு பெரிய செயல் பாட்டுக் குழுவின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவில் சிறிய அளவிலான, ஏஐ அடிப்படை யிலான வாடிக்கையாளர் குழுக்களை அமைத்துள்ளோம். இதன் மூலம் இந்தியப் பணியாளர்களைச் சார்ந் திருக்கும் நிலை குறைந்துள்ளதால், இந்தியாவில் உள்ள தனது அலுவல கங்களை மூடி, இங்கிருந்து வழங்கப் பட்டு வந்த ஆதரவுச் சேவைகளை நிறுவனம் நிறுத்திக் கொள்கிறோம்” என்றார்.