தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

7 Aug 2026, 11:06 pm
தொழில்நுட்ப கதிர்

தொழில்நுட்ப கதிர்

ஓபன் ஏஐ-இன் ‘ஜிபிடி-5.6 லூனா’ அறிமுகம்!

சாட் ஜிபிடி-இல் இலவச கணக்கு வைத்துள்ள அனைத்து பயனர்களுக்கும் மிக வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படக்கூடிய ஜிபிடி-5.6 லூனா (GPT-5.6 Luna) என்ற புதிய ஏஐ  மாடலை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜிபிடி-5.6 லூனா ஏஐ  மாடலில், இலவசப் பயனர்களுக்கு இதுவரை இருந்துவந்த தினசரி செய்தி/கேள்விகளுக்கானவரம்புகள் நீக்கப்பட்டு, இனி எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணமின்றி உரை மற்றும்குரல் வடிவிலான உரையாடல்கள் மேற்கொள்ளும் வசதியும், படங்களை உருவாக்கம் வசதியும்வழங்கப்பட்டுள்ளது. ஜிபிடி-5.6 லூனா, முந்தைய இலவச மாடல்களை விட மிகக் குறைந்த நேரத்தில் விரைவாகப் பதிலளிக்கும் திறன் கொண்டது. இதில், புதிதாக ‘Think’ என்ற பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் சிக்கலான கேள்விகள் அல்லதுதர்க்கரீதியான வினாக்களுக்குப் பதிலளிக்கும் முன், ஏஐ ஆழமாகச் சிந்தித்துத் துல்லியமான விடைகளை வழங்கப் பயன்படுகிறது.

மேலும், சாட் ஜிபிடி Plus மற்றும் Pro சந்தாதாரர்களுக்காக, சாட் ஜிபிடி-இன் உரையாடல் பயன்பாட்டில் ஜிபிடி-5.6 சோல் (GPT-5.6 Sol) மாடலை ஓபன் ஏஐ நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.

போலி மென்பொருள் அப்டேட் -கணினிகளை கைப்பற்றும் சைபர் குற்றவாளிகள்!

பிரபல மென்பொருட்களின் பெயரில் போலியான அப்டேட் அறிவிப்புகளை வெளியிட்டு, பயனர்களின் கணினிகளை கட்டுப்படுத்தும் புதிய சைபர் தாக்குதல் குறித்து செக்யூரோனிக்ஸ் ட்ரெட் ரிசர்ச் (Securonix Threat Research) நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூம் (Zoom) மற்றும் அடோப் (Adobe) போன்ற மென்பொருட்களின் அதிகாரப்பூர்வ அப்டேட் பக்கங்களைப் போலவே போலி இணையதளங்களை உருவாக்கி, “மென்பொருள் காலாவதியாகிவிட்டது; அப்டேட் தேவை” என பயனர்களுக்கு தகவல் அனுப்பப்படுகின்றன. பயனர்கள் அதனை தவறுதலாக பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில், கணினியைத் தாக்கும் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் சைபர் குற்றவாளிகள் பயனர்களின் கணினியை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து தகவல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றதாக செக்யூரோனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ‘ConnectWise ScreenConnect’ என்ற உண்மையான Remote Access மென்பொருளே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் கணினிகள் மட்டு மின்றி மேக் ஓஎஸ் சாதனங்களையும் குறிவைத்து போலியான ஜூம் அப்டேட் கோப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில தாக்குதல்களில் Windows Defender மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களை முடக்கி, கணினியில் நீண்ட கால அணுகலைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளும் கண்டறியப் பட்டுள்ளன.

இந்த சூழலில், மென்பொருள் அப்டேட்களை மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது திடீர் பாப்-அப் அறிவிப்புகள் மூலம் பதிவிறக்காமல், சம்பந்தப்பட்ட மென்பொருளின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கூகுள் டிரைவ் மூலம் புகைப்படங்களை பேக்-அப் செய்யும் வசதி நிறுத்தம்!

டெஸ்க்டாப்களுக்கான கூகுள் டிரைவ் மூலம் கணினியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தானாகவே கூகுள் போட்டோஸ்-இல் பேக்-அப் செய்யும் வசதி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் டெஸ்க்டாப்களும் இந்த மாற்றம் பொருந்தும். கூகுள் போட்டோஸ்-இல் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இருக்கும். இந்த மாற்றத்தால், எதிர்காலத்தில் கணினியில் சேர்க்கப்படும் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக பேக்-அப் ஆகாது. பயனர்கள் மீண்டும் தங்களது பேக்-அப் ஃபோல்டர்களை (Back-up Folders), கூகுள் போட்டோஸ்-இல் தேர்வு செய்ய வேண்டும். அதுவரை புதிய புகைப்படங்களை Manual-ஆக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.