முந்தய பக்கம்

சவுண்டம்மன் கோவிலை திறந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திடுக!

14 Nov 2025, 1:26 pm
சவுண்டம்மன் கோவிலை திறந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திடுக!

சவுண்டம்மன் கோவிலை திறந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திடுக!

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை, நவ.14- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றி யம்,  கட்டங்குடி ஊராட்சிக் குட்பட்டது அம்மா நகர். இங்கு சவுண்டம்மன் கோ வில் உள்ளது. இதை  வரு வாய்த்துறை நிர்வாகம்  கடந்த 4 வருடங்களுக்கு முன்பு  பூட்டியது.  இக்கோ விலை திறந்து விடக் கோரி பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, கோவிலை திறந்து பக்தர்களின் வழி பாட்டு உரிமையை பாது காக்க வேண்டும் என வலி யுறுத்தி   மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை ெற்றது. இப்போராட்டத்திற்கு ஏ.சிவராமன் தலைமை யேற்றார். ஒன்றிய செயலா ளர் எம்.கணேசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம். முத்துக்குமார்  உரையாற்றி னார்.   மேலும் இதில் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் எம். காமாட்சி நாதன், லீலாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram